Header Top Ad
Header Top Ad

கோவையில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றம்!

கோவை: உயர் நீதிமன்ற உத்தரவின் படி, கோவையில் சாலையோரம் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டன.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் கொடிக்கம்பங்களை அவரவர் அலுவலக வளாகத்திற்குள் மட்டுமே நிறுவ வேண்டும் என்றும், சாலையோரம் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதற்கான காலக்கெடுவை நிர்ணயித்தது.

அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவையில் சிங்காநல்லூர், பீளமேடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிக் கொடிக்கம்பங்களை அகற்றும் பணிகள் துவங்கி நடைபெற்றது.

அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட, மத்திய மண்டலத்தில் 49, கிழக்கு மண்டலத்தில் 71, வடக்கு மண்டலத்தில் 46, மேற்கு மண்டலத்தில் 22 மற்றும் தெற்கு மண்டலத்தில் 27 கொடிக்கம்பங்கள் என மொத்தம் 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.

உங்கள் பகுதியில் சாலையோரம் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் இருந்தால் உடனே மாநகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் மக்களே!

Advertisement

Recent News