Header Top Ad
Header Top Ad

விலையில் வீழ்ச்சி: இன்றைய தங்கம் விலை நிலவரம்!

கோவை: விறுவிறுவென உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத விலை உயர்வைச் சந்தித்து வந்த நிலையில், இன்று விலை குறைவைச் சந்தித்துள்ளது.

அதன்படி, கோவையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150ம், பவுனுக்கு ரூ.1,200ம் குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் ரூ.8,980க்கும், ஒரு பவுன் ரூ.71,840க்கும் விற்பனையாகிறது.

Advertisement

18 காரட் ஆபரணத் தங்கம் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.105ம், பவுனுக்கு ரூ.840ம் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.7,385க்கும், ஒரு பவுன் ரூ.59,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ஒரு ரூபாய் மட்டும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.117க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17.000க்கும் விற்பனையாகிறது.

Recent News