5 மாதங்களுக்கு பிறகு கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 5 மாதங்களுக்கு பிறகு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் மொத்தம் 41 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கோவையில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்” மற்றும் செம்மொழி பூங்கா பணிகள் காரணமாக கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறவில்லை.

சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மாநகராட்சியில் அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்கள் குறை தீர் கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், உதவி கமிஷனர் குமரேசன் முன்னிலையில், இந்த கூட்டம் நடந்தது.

இதில் பொதுமக்கள், தங்களது அடிப்படை தேவைகள் குறைகள் சம்பந்தமான மனுக்களை அளித்தனர். நடந்த இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 41 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

Recent News

ஜவுளித்துறையினருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அறிவித்த முதல்வர்…

கோவை: தமிழகத்தில் ஜவுளித்துறைக்காக இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு 20% மூலதன மானியம் வழங்கப்படும் என்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு அரசின் துணிநூல்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து கோவை...

Video

Join WhatsApp