Header Top Ad
Header Top Ad

தலைவர்கள் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வையுங்கள்- மமஇ போராட்டம்

கோவை: பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் மேற்கொண்டு நாங்களே புகைப்படங்களை வைப்போம் என தெரிவித்துள்ளனர்

பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம் மேற்கொண்டனர்.

அரசாணைப்படி பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், பெரியார் ஆகியோரது புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து கடந்த இரண்டு வாரங்களாக அவர்கள் மனு அளித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் பேரறிஞர் அண்ணா, அம்பேத்கர், பெரியார் புகைபடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து போராட்டம் மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது அரசாணையை தான் நிறைவேற்ற வலியுறுத்துவதாக கூறியும் உடனடியாக அரசு அலுவலகங்களில் புகைப்படங்களை வைக்க வேண்டுமென முழக்கமிட்டனர். இல்லையெனில் நாங்களே புகைபடங்களை வைப்போம் என கூறினர்.

Recent News