கோவை: கோவையில் ரயில்வே பணிமனை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
கோவையில் ரயில்வே பணிமனை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பணிமனை வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
லோக்கோ பைலட்டுகளின் கேஎம்ஏ 25 சதவீதம் உயர்த்துவதுடன் அதன் வருமான வரிவரம்பை 70% ஆக உயர்த்த வேண்டும், அனைத்து நிலைகளிலும் உள்ள 2.5 லட்சம் காலி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், எட்டாவது சம்பள கமிஷன் பணிகளை விரைவு படுத்த வேண்டும், ரயில்வே துறையில் ஆட்குறைப்பு தனியார் மையமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் லோக்கோ பைலட்டுகள் 36 மணி நேரத்திற்குள் ஹெட் குவாட்டர்ஸ் திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து ரயில்வே மருத்துவமனைகளிலும் பெண்களுக்கு கருத்தரிப்பு சிகிச்சைக்கான வசதிகளை உருவாக்க வேண்டும் என்றும் கணவன் மனைவி இருவரும் இந்தத் துறையில் பணிபுரிந்தால் குழந்தைகளை பராமரிக்க தரப்பட்டுள்ள CCL யை இருவருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும் அதனை இரண்டாம் ஆண்டு சம்பளமாக 100% வழங்கிட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பணிமனை ஊழியர்கள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

