Rain alert: இந்த வாரம் கோவையில் மழைக்கு வாய்ப்பு!

Rain alert: இந்த வாரத்தில் 3 நாட்கள் கோவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு கேரளாவை ஒட்டிய பகுதிகளில் மழை வரும் என்று வானியலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே கோவையிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

கோவையில் நாளை (புதன்கிழமை) குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்ச 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

கோவையில் நாளை (புதன்கிழமை) குறைந்தபட்சம் 21 டிகிரி செல்சியஸ் முதல், அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 27ம் தேதி குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசிலிருந்து, அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.

பிப்ரவரி 28ம் தேதி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நாளில் 22 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி வரை வெப்பம் பதிவாகக்கூடும்.

மார்ச் 1ம் தேதி மாவட்டத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு.

மார்ச் 2ம் தேதி குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 33 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு. ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Recent News

Latest Articles