Header Top Ad
Header Top Ad

கோவையில் ஊர்க்காவல் படைக்கு ஆள் சேர்ப்பு

கோவை: கோவை மாநகரில் ஊர்க்காவல் படையில் பணிபுரிய ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் உத்தரவின்படி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் இன்று காலை 7 மணி முதல் ஊர்க்காவல் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement
Lazy Placeholder

இந்த முகாமில் இதுவரை 43 ஆண்கள், 10 பெண்கள் என மொத்தம் 53 பேர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் சரி பார்ப்பு, உயரம் மற்றும் எடை அளவீடு, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உடற்தகுதியில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது.

Advertisement
Lazy Placeholder
Lazy Placeholder

இந்த ஆள்சேர்ப்பு முகாம், ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் நாகராஜன் மேற்பார்வையில் நடைபெற்றது. ஊர்க்காவல் படை பிரதேச தளபதி விக்னேஷ்வர் முகாம் ஏற்பாடுகளை முன்னின்று நடத்தினார்.

இந்த முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள், மாநகர காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகள், போக்குவரத்து பணிகள் ஈடுபட உள்ளனர்.

Recent News

Latest Articles