Header Top Ad
Header Top Ad

கோவையில் வருவாய் துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு போராட்டம்

கோவை: வருவாய் துறை சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

கோவை: வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பணி பாதுகாப்பு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக தங்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வருவாய் துறை ஊழிகளுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் நில அளவீடு போது நில அளவையாளர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் குண்டர்களால் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது உடனடியாக கருணை அடிப்படையில் அரசு வேலை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Recent News