சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை Sabarimala ஐயப்பன் கோயில் நடை இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. சிறப்புப் பூஜைகளுடன், டிசம்பர் 26ம் தேதி பகல் 12.30 மணியளவில் மண்டல பூஜையும் நடத்தப்பட்டது. அதன்பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டது.

இந்த காலகட்டத்தில் கேரளா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.

இதன் பின், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அன்றைய தினம் முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் திறப்பு

இதன் முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை ஜனவரி மாதம் 14ம் தேதி அன்று நடத்தப்பட்டது. பின்னர் மீண்டும் கோயில் நடை அடைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று முதல் கோயில் நடை திறக்கப்படுவதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. தமிழில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

இன்று மாலை ஐயப்பனுக்கு அபிஷேகத்துடன் சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த 5 நாட்களுக்கு (பிப்ரவரி 17ம் தேதி வரை) கோயில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் இந்த காலகட்டத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முக்கிய அறிவிப்பு: தமிழ்நாடு தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது; அறிவிப்புடன் தேர்தல் நடத்தை விதிகளும் உடனடியாக அமலுக்கு வரும்.

Video

கோவை குறித்த ஆவணப்படம் வெளியீடு…

கோவை: கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள் புத்தகம், மற்றும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பி.எஸ்.ஜி. ஐ.எம்.எஸ்.ஆர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட காபி டேபிள்...