கோவை: நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சிறுவாணி அணை நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.
கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது சிறுவாணி அணை. கேரள மாநிலம் பாலக்காட்டு மாவட்டத்தில் உள்ள மன்னார் காடு என்ற அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அணையில் இருந்து மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 22 வார்டுகளுக்கும், 28 கிராமங்களுக்கும், 7 டவுன் பஞ்சாயத்துகளுக்கும் இந்த அணையிலிருந்து தான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில்
44.61 அடிக்கு நீரை தேக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கேரளா மற்றும் கோவையை ஒட்டியுள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் சிறுவாணி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தற்போது இந்த அணையில் 39.13 அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. இன்னும் ஐந்தே அடியில் அணை நிரம்ப உள்ளது.
இந்த சூழலில், சிறுவாணி அணையிலிருந்து தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.