தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடி ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி இரண்டு தினங்களுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement

கோவையில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிக்கும் பயிற்சி வருகின்ற 10 மற்றும் 11ம் தேதி ஆகிய இரண்டு தினங்களுக்கு வழங்கப்படுகிறது.

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த பயிற்சியில் மசாலா பொடிகளான சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடிகள், சிக்கன் 65 மசாலா பொடி ஆகிய பொடி தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்திரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகிய ஊறுகாய் வகை தயாரிப்பு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பயிற்சி முதல் நாள் அன்று ஜிஎஸ்டி உடன் 1770 ரூபாய் Gpay செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவரை தொடர்பு கொள்ளலாம் என்றும், தொலைபேசி எண் 9488518268, 0422 6611340 மின்னஞ்சல்: phtc@tnau.ac.in ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் வேளாண்மை பொறியியல் தீர்வுகள் மாநாடு நடைபெற உள்ளது…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள் என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நாளை நடைபெற உள்ளது கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்-க்கு உட்பட்ட வேளாண் பொறியியல் கல்லூரி...

Video

கோவையில் நடந்த விபத்து – காரில் மோதி வீசப்பட்ட இளைஞர்: VIDEO

கோவை: கோவையில் சினிமா பாணி நடந்த விபத்தில் கார் மீது மோதி அதன் கூரை மீதே பறந்து விழுந்த இளைஞரின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கார்...