கோவை: ஸ்டாலின் போன்று சிறந்த எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லை என்று கூறிய நடிகை கஸ்தூரி அவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அதிகரித்து விட்டதாகவும் அதனை கண்டிக்கும் விதமாகவும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மகளிர் அணியினர் சார்பில் காந்தி பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பாஜக மகளிர் அணியினர் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதில் பேசிய நடிகை கஸ்தூரி, அனைத்து இடங்களிலும் குற்றம் இருக்கும் கடந்த ஆட்சியில் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சியில் பயந்து போய் இருப்பார்கள் ஆனால் தற்போது பொதுமக்கள் அனைவரும் பதற்றத்தில் இருக்கிறார்கள் என்றார். பாலியல் குற்றவாளிகள் கல்லூரி கேம்பஸில் சுற்றி கொண்டு இருக்கிறார்கள் எனவும் கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் குற்றம் நடந்தது, சீக்கிரம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தானே கூறிய அவர் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை என கேள்வி எழுப்பினார்.
வேலியே பயிரை மேயும் அவலம் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது என்றும் கஞ்சா விற்பவர்களை நாம் வேறு எங்கும் தேட வேண்டியது இல்லை, நேராக சென்று அமைச்சர்களின் புகைப்பட ஆல்பங்களை பார்த்தால் போதும் என்றார். ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டாளிதான், அவர் உள் கையாள்தான் என கூறிய அவர், கஞ்சா விற்பனையால் தான் தேர்தலுக்கு பணம் சம்பாதிக்கிறார்கள் என ஆதவ் அர்ஜுனாவே கூறுகிறார் என்றார்.
ஸ்டாலின் மாதிரி எதிர்கட்சி தலைவர் கிடையாது என பாராட்டுகிறேன் மீண்டும் அவர் எதிர்கட்சி தலைவர் ஆக வேண்டுமென ஆசைப்படுகிறேன், ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது நன்று செயல்படுகிறார் என்றார். அதிமுக ஆட்சியில் 10 மணிக்கு மேல் மது கிடைக்காது ஆனால் தற்போது சொடக்கு போட்டால் டோர் டெலிவரி ஆகிறது பெண்களுக்கு கவர் போட்டு தருகிறார்கள் என்றார்.
கனிமொழி பெண்களை ஒருங்கிணைக்கும் படலத்தில் உள்ளீர்களே இந்த 5 வருடத்தில் பெண்களின் அழுகுரல் கேட்கவில்லையா? எனவும் கேள்வி எழுப்பினார். கனிமொழி பல தடவை பொய்மொழி ஆகிவிடுகிறார்கள் என்றும் கனிமொழி ஸ்டர்க்கர் ஒட்ட ஆரம்பித்து விட்டார் என்றும் விமர்ச்சித்தார்.
திமுக தீ அரசை திருவள்ளுவர் அப்போதே குறிப்பிட்டுள்ளார் என “அல்லல் பற்றும் ஆறாத” என்ற குரலை மேற்கோள் காட்டினார்.
இரண்டு அமாவாசையில் திமுகவிற்கு அல்வா கொடுக்க போகிறோம் நான் நடித்தது அடிமைப்படை இங்கு இருப்பது பெண்களின் பெரும் படை என்றார்.
கொடுமை கொடுமை என்று சென்றால் அங்கொரு கொடுமை காத்துக் கொண்டிருக்கிறது என்று காவல்துறையை சுட்டி காட்டிய அவர் பெண்கள் புகார் அளிக்க காவல்நிலையம், அமைச்சர்கள் இல்லத்திற்கு சென்று விடாதீர்கள் அங்கு சென்றால் அமைச்சர்கள் தரகுறைவாக பேசுவார்கள் என்றார் (இந்த இடத்தில் அமைச்சர்கள் படுக்க சொல்வார்கள் என கொச்சையாக பேசி இருப்பார்)
பிரதமர் பெண்களை எப்படி வைத்துள்ளார் என கூறிய கஸ்தூரி ஒரு பெண்மணி நாட்டின் குடியரசு தலைவர், ஆப்ரேசன் சிந்தூரில் இருந்ததும் இரண்டு பெண்கள் என்றார்.
நமக்கு நல் ஆட்சி வளர வேண்டுமென்றால் மத்தியில் தாமரை மலர வேண்டும், இங்கு இரட்டை இலை தளர வேண்டும் என்றார். திமுகவினரிடம் Keep Distance என்று நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டுங்கள் என்றார். மேலும் தீ சக்தி திமுகவே போ… ஒழிந்து போ… என ஜபம் செய்யுங்கள் என கூறினார்.

