கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டி…

கோவை: மாநில அளவிலான எட்டாவது சதுரங்கப் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்ப்பாளையத்தில் மாநில அளவிலான எட்டாவது சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை கோவை மாவட்டச் சதுரங்கக் கூட்டமைப்புடன் இணைந்து தி யுனைடெட் பப்ளிக் பள்ளி அதன் வளாகத்தில் நடத்தியது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கேடயம் மற்றும் கோப்பைகள் ஆகியவை வழங்கப்பட்டன.

மாநில அளவிலான எட்டாவது சதுரங்கப் போட்டி கோவை மாவட்டச் சதுரங்கக் கூட்டமைப்புடன் மற்றும் தி யுனைடெட் பப்ளிக் பள்ளி இணைந்து பள்ளி வளாகத்தில் நடத்தினர்.
இப்போட்டி கோவை மாவட்டச் சதுரங்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணபிரான், சந்தீப், தனசேகர் ஆகியோர் தலைமையிலும், தி யுனைடெட் பப்ளிக் பள்ளியின் செயலர் முனைவர் மைதிலி சண்முகம், யுனைடெட் கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் முனைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர்.

9 வயதிற்கு உட்பட்டோர், 12 வயதிற்கு உட்பட்டோர், 15 வயதிற்கு உட்பட்டோர், திறந்தவெளி மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பிரிவு என பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர் முதலிய பல்வேறு மாவட்டங்களில் இருந்து 227 சதுரங்க போட்டியாளர்கள் ஆர்வமுடம் பங்கேற்று விளையாடினர்.

இதில் 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 47 வீரர்களும், 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 77 வீரர்களும், 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 51 வீரர்களும், திறந்தவெளி பிரிவில் 52 வீரர்களும் பங்கேற்று விளையாடினர், 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவிற்கு 6 சுற்றுகளும், 12 மற்றும் 15 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் திறந்தவெளி பிரிவிற்கு 7 சுற்றுகளும் நடத்தப்பட்டது.

முன்னதாக இதன் தொடக்க நிகழ்வில் யுனைடெட் பப்ளிக் பள்ளி முதல்வர் ஹரிணி மற்றும் துணை முதல்வர் அனிதா தேவ பிரியா ஆகியோர் போட்டியாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினர்.

போட்டிகளின் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், கேடயம் மற்றும் கோப்பைகள் சிறப்புப் பரிசுகளாக வழங்கப்பட்டது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்…

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாண்புமிகு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.