கோவை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்கம்… டீச்சர்ஸ் கொடுத்த சர்ப்ரஸ்…

கோவை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.

Advertisement

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

சேர்க்கை தொடங்கி முதல் நாளில் இப்பள்ளியில், எல்.கே.ஜி, வகுப்பில் மூன்று மாணவர்களுக்கும் யு.கே.ஜி, வகுப்பில் மூன்று மாணவர்களுக்கும், ஒன்றாம் வகுப்பில் ஆறு பேருக்கும் என மொத்தம் 12 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

பள்ளியில் இணைவதற்கு வந்த மாணவர்களுக்கு சர்ப்ரைசாக ஆசிரியர்கள் ஸ்பைடர்-மேன், பார்பி உள்ளிட்ட முகமூடிகளை அணிவித்தும், கிரீடத்தை அணிவித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் மாணவர் நலன் சார்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் இங்கு மாணவர் சேர்க்கைக்கு கடும் கிராக்கி உள்ளது.

எம்.எல்.ஏ, சிபாரிசு கடிதங்களுடன் வந்து பள்ளியில் அட்மிஷன் போட்ட கதைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News