கோவை: பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாரதிதாசனின் 135வது பிறந்தநாள் விழா ஏப்ரல் 29ல் இருந்து, மே 5 வரை கொண்டாடப்பட்டது. இந்த நாட்களில் அரசுப் பணியாளர்களுக்கு எட்டு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன.
கையெழுத்துப் போட்டி, தினம் ஒரு கவிதை, கலை இலக்கியப் போட்டி என பல்வேறு வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, கலை பண்பாட்டுத்துறை சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் இசைக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு பரதநாட்டியம் ஆடினர்.
தொடர்ந்து, பரதம் ஆடிய மாணவிகள் மற்றும் போட்டிகளில் வென்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என 16 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.