த.வெ.க 2வது மாநாடு… இடம், தேதியை அறிவித்தார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டை அக்கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார்.

விஜய்யின் அடுத்த மாநாடு கோவையில் இருக்கும் என்று பரவலாகப் பேசப்பட்ட நிலையில், மதுரையில் நடைபெற உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன். வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்

என்று விஜய் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

Join WhatsApp