சென்னை: தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னையில் இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 11ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6ம் தேதி வரை இவர்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன.
மேலும், மார்ச் 2ம் தேதி தொடங்கி, மார்ச் 26ம் தேதி வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகிறது.
தேதி அறிவித்ததால் மாணவர்கள் பதற்றமடையத் தேவையில்லை. உற்சாகத்துடன் தேர்வுக்கு தயாராகுங்கள். பொதுத்தேர்வில் மாணவர்கள் சாதாரண கால்குலேட்டர் பயன்படுத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


