ஆசையாய் மது ஊற்றிக்கொடுத்து கணவனின் கதையை முடித்த மனைவி!

கரீம்நகர்: திருமணத்தை மீறிய உறவுக்காக கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய காட்சியளித்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சப்தகிரி காலனியில் வசித்து வந்தவர் சுரேஷ் (36). இவரது மவுனிகா. இந்த தம்பதிக்கு இரண்டுகுழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே கடந்த செப்டம்பரில் 18ம் தேதி சுரேஷ்மர்மமான முறையில் உயிரிழந்தார். கணவன் இறந்துவிட்டார் என்று மவுனிகா தனது சொந்தபந்தங்களைக் கூட்டி தெரிவித்து கண்ணீர் வடிக்க. அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், மவுனிகாவே சுரேஷை கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் ஆன சுரேஷ் மற்றும் மவுனிகா தம்பதியருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு, மவுனிகா கள்ளத்தொழிலில் ஈடுபட்டதுடன், டொம்மட்டி அஜய் என்ற ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தார்.

Advertisement

இதற்கிடையில், சுரேஷ் அடிக்கடி மவுனிகாவிடம் பணம் கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா, மருத்துவ நிறுவன உரிமையாளர் போத்து சிவா கிருஷ்ணா உட்பட சிலருடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய திட்டமிட்டார்.

முதலில் சுரேஷின் உணவில் வயாக்ரா மற்றும் பி.பி. மாத்திரைகளை கலந்து கொடுக்க முயன்றனர், ஆனால் அவர் சாப்பிட மறுத்தார். பின்னர் தூக்கமருந்து கலந்து கொடுக்க முயன்றதும் தோல்வியடைந்தது.

இறுதியாக செப்டம்பர் 17 அன்று மவுனிகா, சுரேஷின் மதுவில் தூக்கமருந்து கலந்து கொடுத்தார். அவர் மயங்கியதும், தன்னுடன் சேர்ந்திருந்த கூட்டாளர்களுடன் சேர்ந்து சுரேஷை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் அது இயல்பான மரணமாக தோன்றுமாறு காட்சியமைத்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.” என்றனர்.

Recent News