Header Top Ad
Header Top Ad

கோவையில் அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் விநியோகம் துவக்கம்…

கோவை: கோவையில் பாட புத்தகங்கள் விநியோகம் துவங்கியது…

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு துவங்க உள்ளது. அதே சமயம் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி முடிந்தன. இந்நிலையில் கோவை மாவட்ட அடுத்த கல்வி ஆண்டிற்கான பாட புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள், என 175 பள்ளிகளுக்கு 6-12ம் வகுப்புகளுக்கான பாடபுத்தகங்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றார் போன்று புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

கோவையை பொறுத்தவரை கோவை மாநகர பகுதிகளிலும், சூலூர், எஸ்.எஸ்.குளம், அன்னூர், மேட்டுப்பாளையம், மதுக்கரை, ஈச்சனாரி உள்ளிட்ட புறநகர் பகுதிகள் வரை உள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Recent News

Latest Articles