சென்னை: தமிழக அரசு சார்பிஅல் பெண்களுக்கான இலவச ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட மற்றும் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச கனரக வாகனங்கள் ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஓட்டுனர் பயிற்சி
நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சாலை போக்குவரத்து நிறுவனத்தின் (Institute of Road Transport) மூலமாக இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர தகுதிகள்
குறைந்தபட்சம் தமிழில் பேசவும், புரிந்துகொள்ளும் திறனும் இருத்தல் வேண்டும்.
20 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

இலகு ரக வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும்.
பி.எஸ்.வி. பேட்ஜ் (PSV Badge) பதியப் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 155 செ.மீ. உயரமும், 40 கி.கி. எடையும் இருக்க வேண்டும். (பயிற்சிக்காக மட்டும்)
உடல் குறைபாடு இன்றி, அங்க அசைவில் குறைபாடின்றி, நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருக்காமல் இருத்தல் வேண்டும்.
கண்ணாடி அணிந்தோ, அணியாமலோ கண்பார்வை திறன் Std 1 (6/6) இருத்தல் வேண்டும். மேலும் நிறபேதம் அறிதலில் கண்பார்வை குறைவின்றி நல்ல திறனுடனும் இருக்க வேண்டும்.
ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியை எப்போதும் செயல்பாட்டில் இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.
பயிற்சி நடைபெறும் இடங்கள்
பொள்ளாச்சி, ஈரோடு, தர்மபுரி, நெல்லை, நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல், விருதுநகர்
கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், வேலூர், திருச்சி, கும்பகோணம், காரைக்குடி, புதுக்கோட்டை, சேலம்
கோவை செய்திகள், கோவைக்கான அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணையாலாம். குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் 👈
விண்ணப்பிக்க லிங்க்: https://t.co/4kU3GsmC45
பலருக்கும் பயனுள்ள இந்த தகவலை உங்கள் நட்பு வட்டத்திற்கு பகிர்ந்து உதவிடுங்கள்