இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்- கோவையில் போராட்டக்காரர்கள் மத்தியில் வானதி சீனிவாசன் பேச்சு…

கோவை: கோவையில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்த வானதி சீனிவாசன் இந்த ஆட்சிக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் அப்பொழுது பத்தாண்டு பணி முடிந்த தகுதியுள்ள பணியாளர்களை 50% சேர்க்க வேண்டும்

அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுமார் 500 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்தார்.

அவர்கள் மத்தியில் பேசிய வானதி சீனிவாசன், எனது தொகுதியில் அனைத்து அங்கன்வாடிகளையும் புதுப்பித்து இருப்பதாகவும் என்னுடைய எம் எல் ஏ நிதியை மட்டுமல்லாமல் மத்திய அரசு நிதி சிஎஸ்ஆர் நிதியை பெற்று கூடுதலாக அங்கன்வாடிகளை கட்டிக் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அங்கன்வாடி ஊழியர்கள் தான் குழந்தைகளுக்கு இரண்டாவது அம்மாவாகவும் இருக்கிறீர்கள் என தெரிவித்த அவர் உங்களை வெயிலில் போராட வைத்துள்ளது இந்த அரசு அவர்கள் கொடுத்த வாக்குறுதியால் தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றார்.

பொய் வாக்குறுதிகளை இந்த அரசு வழங்கி உள்ளது என்றும் நீங்கள் இதற்கு முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சு என்று பேசிவிட்டு தற்பொழுது உங்களை கிரிமினல் போன்ற நடத்துகிறார்கள் என்றும் உங்கள் தோழியாக நான் இருப்பேன் உங்கள் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என தெரிவித்தார். மேலும் சட்டமன்றத்தில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பளித்தால் முதல் கோரிக்கையாக உங்கள் கோரிக்கைகளை பற்றி பேசுவேன் ஆனால் என்னை சட்டமன்றத்தில் பேச விடுவதில்லை, அப்படியே நான் பேசினாலும் அந்த காட்சிகளை நீக்கி விடுகிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கோவையில் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழ்நாடு முழுவதும் அரசாங்க பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழ்நாடு போராட்ட களமாக மாறி உள்ளது என தெரிவித்தார். ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் இந்த அரசு இவர்களை தெருவில் நிறுத்தி உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

சட்டமன்றத்தில் இவர்களின் கோரிக்கையை பற்றி நான் பேசுவேன் என்று வாக்குறுதி கொடுத்துள்ளேன் வருகின்ற தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் அவர்களது கோரிக்கை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவேன் என்று உறுதி அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

தன்னுடைய தொகுதியில் அங்கன்வாடி மையங்கள் கூடுதலாக அமைத்துக் கொடுத்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் வேறு எந்த தொகுதிகளிலும் இந்த அளவிற்கு புதிதாக அங்கன்வாடி மையங்கள் கட்டிக் கொடுத்திருக்க முடியாது என்றும் தெரிவித்தார். அங்கன்வாடி இருப்பதால்தான் குழந்தைகள் உள்ள பெண்கள் உழைக்க வெளியே செல்கின்றனர் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற விவகாரம் தொடர்பான கேள்விக்கு தோல்வி மேல் தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும் எதிர்கட்சிகளும் பிரதமரை இந்த அளவிற்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு பிரதமரை தாக்குவதற்கு நாடாளுமன்றத்திற்குள் போராட்டம் என்கின்ற பெயரில் முயற்சி செய்து இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தால். நாடாளுமன்ற சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்று எம்பி ஜோதிமணி தெரிவித்த கருத்துக்கு அதற்கான பதிலை சபாநாயகர் அளிப்பார் என தெரிவித்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி- கோவை மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு…

கோவை: பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதலாக ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 327 பிரதம சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்களின்...

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.