கோவை: கோவையில் இந்த வார வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கடும் வெப்பம் வாட்டி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மாநகரில் புழுக்கம் அதிகரித்துள்ளது. இதனிடையே இந்த வாரத்தில் கோவையில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு:-
கோவையில் இன்று அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்பு. குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்.
இன்று கோவையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோவையில் நாளை அதிகபட்சம் 37 டிகிரி செல்சியஸ் முதல், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.
மழைக்கு வாய்ப்பு
ஏப்ரல் 24ம் தேதி முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை கோவையில் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த நான்கு நாட்களிலும் கோவை மாநகரின் ஒரு சில பகுதிகளிலும், மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த வானிலை முன்னறிவிப்பை கோவை மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.
