Header Top Ad
Header Top Ad

Group 2 Exam Announcement: குரூப் 2, 2 ஏ தேர்வு தேதியை அறிவித்தது TNPSC

Group 2 Exam Announcement: குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நடைபெறும் தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

சார் பதிவாளர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வருவாய் ஆய்வாளர், வணிகவரித்துறை உதவியாளர், வனவர் உள்ளிட்ட 645 பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நடைபெறுகிறது.

வரும் செப்டம்பர் 28ம் தேதி இந்த தேர்வு நடைபெறும் நிலையில், இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு TNPSC நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக அடுத்தடுத்த ஆண்டுகளிலேயே குரூப் 2, 2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் விவரங்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணபிக்க TNPSC இணைதளத்தைப் பார்க்கலாம் : https://www.tnpsc.gov.in/

Recent News