தங்கம் விலை நேற்று தாறுமாறாக உயர்ந்த நிலையில் இன்று அதே அளவு சரிவைச் சந்தித்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அட்சயதிருதியை தினத்தை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்து வந்த நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத விதமாக பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்தது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே இன்று தங்கம் விலை அதே அளவு சரிவைச் சந்தித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.275ம், பவுனுக்கு ரூ.2,200ம் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.9,015க்கும், ஒரு பவுன் ரூ.72,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
18 காரட் தங்கம் விலையும் இன்று குறைந்துள்ளது. பவுனுக்கு ரூ.1,800 உயர்ந்து, தற்போது ஒரு பவுன் ரூ.59,720க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல், இன்று ஒரு கிராம் ரூ.111க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000க்கும் விற்பனையாகிறது.