கோவை: கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இத்தொகுப்பில் காணலாம்.
நடப்பு மாத தொடக்கத்தில் ஒரு கிராம் தங்கம் (22 காரட்) ரூ.7,940க்கும், ஒரு பவுன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்பட்டது,
தொடர்ந்து கடந்த 4ம் தேதி விலை அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,010க்கு விற்பனையானது. மறுநாளே கிராமுக்கு ரூ.55 அதிகரித்தது.
இதனிடையே கடந்த 6ம் தேதி முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இருக்கத்துடன் இருந்த நிலையில், 13ம் தேதி விலை மீண்டும் அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,120க்கு விற்பனையானது. அடுத்த நாளே தங்கம் விலை விர்ரென
உயர்ந்தது. கிராமுக்கு ரூ.110 அதிரடியாக உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,230க்கு விற்பனை செய்யப்பட்டது.
இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று விலை குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.8,235க்கும் ஒரு பவுன் ரூ.65,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் கோவையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295ம், பவுனுக்கு ரூ.2,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளது. இன்று கிராம் ரூ.6,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.