கோவை: மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும் நூலகங்கள் கோவையில் ஏராளமாக உள்ளன. அவற்றில் டாப் 5 நூலகங்களை இங்கே காண்போம்.
நாகரீகம் வளர வளர இளைஞர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கம் வேகமாகக் குறைந்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியால், அனைத்து தகவல்களும் உள்ளங்கையில் என்பதைப் போல, நம்முடைய செல்போனிலே அனைத்து தரவுகளையும் அறிய முடிகிறது.
குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பெற்றோர்களே, தற்போது செல்போனில் இருக்கும் தேடல்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதேபோல, தற்போது, தனியார் பள்ளிகளிலும், டிஜிட்டல் மயமான கல்விமுறைக்கு மாறி வருகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனே, லேப்டாப்பை ஆன் செய்து தனக்குத் தேவையானதைத் தேடுகிறான். 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் சாப்ட்வேர் கோடிங்கில் கைதேர்ந்தவனாக இருக்கிறான். இதையெல்லாம் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மறுபுறம் புத்தகம் வாசிப்பு மாணவர்களிடையே குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

முன்பெல்லாம், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண, நூலகங்களை நோக்கி மாணவர்கள் படையெடுப்பார்கள். தற்போது, நிலைமையே வேறு.
மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என்பதைப் போல, மீண்டும் நூலகங்களுக்கு நாமும், நமது பிள்ளைகளையும் அழைத்துச் செல்வோம். குறிப்பாக, இந்த கோடை விடுமுறையை மிகவும் பயனுள்ளதாக மாற்றவும், அவர்களுக்கு புது அனுபவத்தை வழங்க, அருகே உள்ள நூலகங்களுக்கு அழைத்துச் சென்று பாருங்கள். நாளடைவில், அதுவே பழக்கமாகவும் மாறலாம்.
கோவையில் உள்ள முக்கிய நூலகங்களின் பட்டியல் இதோ,
ஆர்.எஸ்.,புரம் கிளப் – RS புரம் சாலை,
மாவட்ட மைய நூலகம் – RS புரம், கவுலி பிரவுன் சாலை,
Just For Books Library – சித்தாபுதூர்,
TNAU மெயின் நூலகம் – பி.என். புதூர்
யாழ் நூலகம் – கணபதி
இவை தவிர காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்ற பெயரில் பிரம்மாண்டமான நூலகம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.