கோவை: கோவையில் நாய்கள் கடித்ததால் புள்ளிமான் படுகாயம் அடைந்தது.
கோவையில் புள்ளிமானை நாய்கள் கடித்த நிலையில் தப்பிக்க ஓடும் போது கால் உடைந்து படுகாயம் அடைந்தது. அதனை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் பெரியதடாகம் பகுதியில் வனத்திற்குள் இருந்து வழி தவறி புள்ளி ஒன்று ஊர் பகுதிக்குள் வந்துள்ளது. அந்த மானை அங்கிருந்த தெரு நாய்கள் கடித்து குதறின. நாய்களிடம் இருந்து தப்பிக்க ஓடும் போது கால் உடைந்து காயமடைந்தது.
உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் நாய்களை துரத்திவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து மீட்டு சிகிச்சை அளித்தனர்.
கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் இருக்கும் நிலையில் அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் வருவது தொடர் கதையாகி வருகிறது.



