Header Top Ad
Header Top Ad

11 உயிர்களை பலிவாங்கிய RCB வெற்றிக் கொண்டாட்டம்! சோகக் காட்சிகள் – வீடியோ

துயரம்: 11 உயிர்களை பலிவாங்கியது RCB வெற்றிக் கொண்டாட்டம்! உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அச்சம்!

பெங்களூரு: RCB வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கடந்த 17 ஆண்டுகளாக கோப்பையைக் கைப்பற்ற போராடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

Advertisement

இதனிடையே பெங்களூரு முழுவதும் நேற்றிரவு முதல் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. விடிய விடிய கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

இதனிடையே கோப்பையை வென்ற பெங்களூரு அணி வீரர்கள் அம்மாநில சட்டப்பேரவையில் இருந்து டபுள் டெக்கர் பேருந்து மூலமாக பேரணி வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் அருகே தொண்டர்கள் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

நெரிசலில் சிக்கி அலைமோதிய மக்கள் சிலர் கீழே விழுந்த நிலையில், ஒருவர் மீது ஒருவர் ஏறியதில், 11 பேர் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரசின் மெத்தனப்போக்கே இந்த விபத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்திற்காக கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

18 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த கோப்பையின் ருசியை உணர்வதற்குள் பெங்களூருவில் நடைபெற்ற இந்த துயர சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

11 பேர் பலியான இந்த நிலையிலும், சின்னசாமி ஸ்டேடியத்திற்குள் இன்னும் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பது மக்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.

"35 ஆயிரம் பேர் மட்டும் கூட வேண்டிய இடத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்" - சித்தராமையா, கர்நாடக முதல்வர் 

Recent News

Latest Articles