Trek Tamil Nadu: ஓராண்டில் 15,500 பேர்… இதில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்!

சென்னை: தமிழகத்தில் அரசு ஒருங்கிணைத்த மலையேற்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கலந்து கொண்டு மலையேற்றத்தில் அசத்தியுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் பதிவு பின்வருமாறு:-

ஒரு வருடத்திற்கு முன்பு, மனிதர்கள் இயற்கையை மீண்டும் காதலிக்கச் செய்வது என்ற இலக்குடன் நாம் இந்தப் பயணத்தைத் தொடங்கினோம். Trek Tamil Nadu மூலம் அந்தச் சிறிய தீப்பொறி இன்று ஒரு இயக்கமாக மாறியுள்ளது.

இன்றுவரை 15,500-க்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டின் அழகிய நடைபாதைகளில் பயணித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கது — அந்தப் பயணிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள், முன்னணி நடைபயணிகளாக திகழ்கிறார்கள்.

Advertisement

ஒரு சாதாரண நடைபயணமாகத் தொடங்கியது இன்று இயற்கை பாதுகாப்பை மக்களின் பங்களிப்பால் முன்னெடுக்கும் சமூக இயக்கமாக மாறியுள்ளது. 130 நன்கு பயிற்சி பெற்ற உள்ளூர் வழிகாட்டிகள் இந்தப் பயணத்தை உயிரோடு நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் நடைபாதைகள் உங்களை அழைக்கின்றன — தயாரா நீங்கள்?

என்று சுப்ரியா சாஹு பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு வனத்துறை ஒருங்கிணைக்கும் இந்த டிரெக்கிங்கில் நீங்களும் பங்கேற்க பின்வரும் லிங்கை க்ளிக் செய்யவும் https://www.trektamilnadu.com/

Recent News

Video

Join WhatsApp