Header Top Ad
Header Top Ad

புது வண்டி வாங்கினா இனிமே இரண்டு ஹெல்மெட்கள்; மத்திய அரசு உத்தரவு!

டெல்லி: புதிய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் போது இனிமேல் இரண்டு ஹெல்மெட்கள் வழங்க வேன்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி.அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் பயணிப்போருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் புதிதாக இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன விற்பனையாளர்கள் கட்டாயமாக இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தற்போது உள்ள இருசக்கர வாகனங்களில் 40% வாகனங்களில் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) பொருத்தப்படவில்லை என்றும், இனிமேல் அனைத்து வானங்களிலும் ஏ.பி.எஸ் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) என்பது, பைக்கில் திடீரென அதிக வேகத்தில் பிரேக் அடிக்கும்போது, சக்கரம் உடனடியாக சுழல்வதை நிருத்தி ஸ்கிட் ஆகாமல் தடுக்கும் பாதுகாப்பு தொழில்நுட்பம்.

இது சக்கரங்களைக் கட்டுப்படுத்தி சிறு சிறு இடைவெளிகளில் பிரேக் விட்டுவிட்டுப் பிடிக்கும்.

Advertisement

குறிப்பாக மழைநீர், மணல் போன்ற பிசுபிசுப்பு நிலைகளில் பயணிக்கும் போது ABS முக்கிய பங்கு வகிக்கிறது.

  • வண்டி ஸ்கிட் ஆகாமல் பாதுகாப்பாக நிற்கும்.
  • சாலையில் வாகனத்தின் கட்டுப்பாடு மேம்படும்.
  • திடீர் விபத்துகள் குறையும்

Recent News