Header Top Ad
Header Top Ad

UTS APP : கோவை Reels பிரியர்களே வீடியோ சேலஞ்ச்க்கு அழைக்கிறது ரயில்வே!

கோவை: UTS APP-ஐ பிரபலப்படுத்தும் விதமாக ஒரு நிமிட வீடியோ தயாரிப்பு போட்டிக்கு இன்ப்ளூயன்ஸர்களுக்கு தென்னக ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் முன்பதிவில்லா ரயில்களுக்கான பயணச்சீட்டுகளைப் பெற UTS ( Unreserved Ticketing System) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

Advertisement
Lazy Placeholder

இந்த செயலியை பொதுமக்கள் மத்தியில் பிரபலப்படுத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டம் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையம் சார்பில் யு.டி.எஸ். செயலியை பிரபலப்படுத்தும் விதமாக ஒரு நிமிட வீடியோ சேலஞ்ச் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, கோவை ரயில் நிலைய இயக்குனர் சச்சின் குமார் கூறியதாவது:-

Advertisement
Lazy Placeholder

நாட்டிலேயே முதன்முறையாக யு.டி.எஸ் செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் இத்தகைய போட்டி நடத்தப்படுகிறது. இதில் அனைத்து வயதுக்கு உட்பட்டவர்களும் கலந்து கொள்ளலாம்.

யூ.டி.எஸ் மொபைல் செயலியின் சிறப்பு அம்சங்கள் குறித்து; குறிப்பாக ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், முன்பதிவில்லா ரயில்களில் பயணிக்கும் டிக்கெட்டுகளை எளிதாக யு.டி.எஸ் செயலி மூலம் எடுக்கும் முறை குறித்து, சிறப்பான முறையில் தயாரித்து அனுப்பப்படும் 1 நிமிட வீடியோக்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றுகிறோம். எந்த மொழியிலும் வீடியோ தயாரிக்கலாம்.

அதிக வியூஸ் பெறும் வீடியோக்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. உடன் ரயில்வே பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க மார்ச் 31ம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கேற்க யு.டி.எஸ் செயலியில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து உங்கள் விவரங்களைப் பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இச்செய்தியை ரீல்ஸ் பிரியர்களுக்கு பகிர்ந்து உதவலாம்

Recent News

Latest Articles