வானதி சீனிவாசன் பிறந்தநாள்- கோவையில் நலத்திட்டங்கள் அளித்த தொண்டர்கள்

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ- வின் பிறந்த நாள் விழா – கோவையில் கொண்டாடிய தொண்டர்கள் !!!

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று கோவை தெற்கு தொகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Advertisement

காலை முதல் மாலை வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில், பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான நலத் திட்டங்கள், மற்றும் வைசால் வீதியில் உள்ள குரங்கு சேட் மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினர்.
எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களின் சமூக நலனுக்கான அர்ப்பணிப்பை ஒட்டிய இந்த விழாக்களில், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டு வானதி சீனிவாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Recent News

கோவையில் நடைபெற்ற SIR ஆலோசனை கூட்டம்- ஆட்சேபனை தெரிவித்த கட்சிகள்…

கோவை: SIR ஆலோசனை கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்தான...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp