கோவையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள்…

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் நட்டு வைத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன…

கோயம்புத்தூர் மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட கணபதி மாநகர், பாரதி நகர் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியினை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி, பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேச்சு உரை, சிலம்பம், களரி மற்றும் தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், நெகிழியால் ஏற்படும் மாசுபாடு. புவி வெப்பமடைதல், மரங்கள் பாதுகாப்பு, நீர் சேமிப்பு மற்றும் இயற்கையின் முக்கியத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களால் அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர், கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் மேயர் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர், ஆகியோர் பார்வையிட்டனர்.

Recent News

சூலூரில் தீ விபத்து- கரும்புகை அதிகளவு வெளியேறியதால் மக்கள் அச்சம்..

கோவை: சூலூரில் எலக்ட்ரானிகல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள தனியார் உள்ள வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

Video

Join WhatsApp