மதுரை: மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக (தவெக) இரண்டாவது மாநாட்டில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்கிறது. விஜய் பேசுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியது, முதல் மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அதன் பின், அறிக்கைகள் மூலம் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில், மதுரையில் தவெக இரண்டாவது மாநாடு இன்று நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேற்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு திரண்டு வருகின்றனர்.
மாநாடு நடைபெறும் இடத்தைச் சுற்றியுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். இதன் பிரம்மாண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
விஜய் பேசுவது எப்போது?
விஜய் மாநாட்டு திடலுக்கு பிற்பகல் 3 மணியளவில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் ரேம்ப் வாக் செய்ய உள்ளார். பின்னர் கட்சி நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் உரையாற்றுவார்கள்.
இதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு விஜய் தனது உரையைத் தொடங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது. மாலை 7 மணிக்குள் மாநாட்டை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கள அரசியலில் ஈடுபடவில்லை என்று விஜய் மீது வரும் விமர்சனங்களுக்கு, இந்த மாநாட்டில் அவர் நேரடியாக பதிலளிப்பாரா? என்பது தவெக தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.
Buy TVK Poster & Flag here




மாநாடு தொடர்பாக இணையத்தில் உலாவும் வீடியோ & மீம்ஸ்
Tomorrow 🇪🇸🥵😭🔥#TVKMaduraiMaanadu pic.twitter.com/vNmv9SdK3f
— 👿𝐑𝐀𝐘𝐀𝐏𝐏𝐀𝐍😈𝐓𝐑𝐎𝐋𝐋𝐒2.0🗡 (@RayapanTrolls) August 20, 2025
No CG
— Hosur Movies Updates (@CinemasHosur) August 21, 2025
No VFX
No 300 Rs Payment
No Editing by IT Wing
This is the Purest Form of Love for just One Man 🔥.. #TVKVijay – The Powerhouse of Tamil Nadu 🥵#TVKMaduraiMaanadu #TVKVettriMaanadu#TVKVettriMaanadu pic.twitter.com/mKN4vzmrr7
கடைசிய ஆளபோறன் பாட்டு போடுங்க @AadhavArjuna : current off பண்ணியாச்சி நாளைக்கு வாங்க 🥵#TVKMaduraiMaanadu
— LEOJD (@JDLogn) August 20, 2025
pic.twitter.com/7fQ735Rwsf
கொடி பறக்குது கொடி பறக்குது
— இன்பா (@onlyvijay74) August 20, 2025
வேட்டைக்காரன் வர்ரத பார்த்து🔥🔥🔥#TVKMaduraiMaanadu pic.twitter.com/nTBjzXOwpN
எவ்வளவு காசு குடுத்தாலும் இந்த அன்பு யாருக்கும் கிடைக்காது நம் தலைவரை தவிர 🔥🔥🥹#TVKMaduraiMaanadu
— 𓃰TVK✘Pratheesh𓃰 (@TVK_Pratheesh) August 19, 2025
pic.twitter.com/Fv3zalxZ9g
