Header Top Ad
Header Top Ad

விநாயகர் சதுர்த்தி: சுலபமான 3 வகை கொழுக்கட்டை ரெசிபிகள்!

விநாயகர் சதுர்த்தி நாளில் கணேசபெருமானுக்கு மிகவும் பிரியமான நெய்வேத்யமாக கொழுக்கட்டை தயாரிக்கப்படும் பழக்கம் தொன்றுதொட்டு தொடர்கிறது.

இனிப்பு சுவை முதல் காரசார சுவை வரை பல்வேறு வகைகளில் செய்யப்படும் கொழுக்கட்டை, பண்டிகை நாளை இன்னும் சிறப்பாக்குகிறது.

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 1 கப்
  • துருவிய தேங்காய் – 1 கப்
  • வெல்லம் – ¾ கப்
  • ஏலக்காய் – 2
  • நெய் – 1 டீஸ்பூன்

செய்முறை

அரிசி மாவை சூடான தண்ணீரில் பிசைந்து, சப்பாத்தி மாவு பததிற்க்கு கொஞ்சம் மென்மையான மாவாக்கி மூடி வைக்கவும்.

வெல்லத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வடிகட்டி கொள்ளவும் அதில் தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பில் அது கெட்டியாகும் வரை நன்றாக கிளரவும். இப்போது பூரணம் தயார்.

Advertisement

இந்த பூரணத்தினை அரிசிமாவை உருண்டைகளாக உருட்டி கைகளால் தட்டையாக ஆக்கி பூரணத்தை வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் செய்த பின்பு. இவற்றை இட்லி பானையில் ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். கொழுக்கட்டை தயார்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் இட்லி அரிசி
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
  • 2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
  • 1 மேஜைக்கரண்டி கடுகு
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • ¼ மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு எண்ணெய்
  • சிறிதளவு கருவேப்பிலை

செய்முறை

முதலில் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி ஒரு கிண்ணத்தில் வைத்து பின்பு இட்லி அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு இட்லி அரிசியை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து,

அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம், கடலைபருப்பு , உளுந்து பருப்பு, கருவேப்பில்லை , மிளகாய் சேர்த்து தாளித்து, பின்பு அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், தேவையான அளவு உப்பு, மற்றும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதில் இருக்கும் தண்ணீர் நன்கு வற்றி அது கெட்டியாகும் வரை அதை வதக்கவும்.

மாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விட்டு pan ஐ கீழே இறக்கி வைத்து அதை சிறிது நேரம் ஆற விடவும்.

மாவு ஆறிய பிறகு ஒரு கை அளவு மாவை எடுத்து கொழுக்கட்டைகாளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான உப்பு கொழுக்கட்டை தயார்.

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு – 1 கப்
  • எள் – ½ கப்
  • வெல்லம் – ½ கப்
  • ஏலக்காய் – 2

செய்முறை

எள்ளை வறுத்து பொடியாக அரைக்கவும். இதனுடன் அதில் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து பூரணம் செய்யவும். பின்பு அரிசி மாவை பிசைந்து உருண்டை போல் செய்து பூரணத்தை வைத்து மூடி கொழுக்கட்டை வடிவம் செய்துகொள்ளவும்.

அதன் பிறகு பிடிக்கப்பட்ட கொழுக்கட்டைகளை ஆவியில் வேகவைத்து பரிமாறவும்.

Recent News