Header Top Ad
Header Top Ad

விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளோம்: கோவையில் பா.ஜ.க தலைவர் பேட்டி!

கோவை: பா.ஜ.க சார்பில் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisement
Lazy Placeholder

அப்போது அவர் பேசியதாவது:-

பெங்களூரில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதில், ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பது மிகவும் வருத்தம் வேதனைக்கு உரிய செய்தி.

Advertisement
Lazy Placeholder

பெங்களூரில் இந்த இந்த நிகழ்விற்கு சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்தது தான் உயிரிழப்பிற்குக் காரணம்.

மகாராட்டிர மாநிலத்தில் கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது பா.ஜ.க அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது. பாதுகாப்பாக நடத்தி இருக்க வேண்டிய நிகழ்வை சரியாக கர்நாடக அரசு செய்யவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழக அரசு
விவசாயிகளை வஞ்சிக்கின்றது. தி.மு.க ஆட்சி இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. அதுவரை
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நடப்பது உட்கட்சி பிரச்சினை. குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சென்று இருப்பது தனிப்பட்ட முறையில், பாஜகவிற்கும் அதற்கும் தொடர்பு இல்லை.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கைதானவர்கள் 19 கொலைகள் செய்து இருப்பதாக வாக்கு மூலம் கொடுத்து இருக்கின்றனர். ஏற்கனவே கைதாகி இருப்பவர்கள் நிரபராதிகளா? தவறே செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களா?

மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தான் அமித்ஷா வருகின்றார். முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும்.

அனைத்து கட்சிகளும் ஒரு அணியிலிருந்து தி.மு.க அரசைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு, த.வெ.க தலைவர் விஜய்க்கும் இதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

Recent News

Latest Articles