செய்ய முடிந்ததை தான் வாக்குறுதிகளாக கொடுப்போம்- கோவையில் கனிமொழி பேட்டி…

கோவை: செய்ய முடிந்ததை வாக்குறுதிகளாக கொடுப்போம் என கனிமொழி தெரிவித்துள்ளார்.

கோவை அடுத்த பல்லடத்தில் வருகின்ற திங்கட்கிழமை திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான ஏற்பாட்டு பணிகளை பார்வையிட திமுக மகளிர் அணி செயலாளரும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒருங்கிணைப்பாளருமான கனிமொழி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தேர்தல் அறிக்கை குழு நிர்வாகிகளிடம் கலந்து பேசி தேதி முடிவு செய்து விட்டு, கோவையில்
தொழில் துறை, விவசாயிகள் என பல்வேறு மக்களின் கருத்துக்கள் கேட்டகப்படும் எனவும் தெரிவித்தார்.


இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும், என முதல்வர் கூறியிருப்பதாகவும் எனவே கோவையில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து கருத்துகள் கேட்டறியப்படும் என்றார்.

மக்களுடைய தேவை என்ன என்பதை கேட்டு தெரிந்து, எதை செய்ய முடியுமோ அதை தான் வாக்குறுதியாக கொடுப்போம் எனவும், அதில் எண்ணிக்கை என்பதெல்லாம் கணக்கு கிடையாது என தெரிவித்தார்.

பெண்கள் பாதுகாப்பு குறித்து தவெக உட்பட எதிர்கட்சி விமர்சனங்கள் முன்வைத்து வரும் கருத்துக்கள் தொடர்பான கேள்விக்கு,
அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பல பொய்யான விமர்சனங்களை சிலர் வைப்பார்கள், ஆனால் உண்மை என்ன என்பது இங்குள்ள நபர்களுக்கு தெரியும், இதற்கு மேல் விளக்கமளிக்க தேவையில்லை என்றார்.

யாருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தேர்தல் முடிந்த பிறகு தெரியும் எங்களை பொறுத்தவரை நாங்கள் உறுதியாக இருக்கிறோம் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும், ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக தொடர்வார் என கூறினார்.

Recent News

Video

Join WhatsApp