கோவையில் இந்த வார வானிலை; மழைக்கு வாய்ப்பு இருக்கு!

கோவை: கோவையில் இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என்ற முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (நவம்பர் 10) முதல் நவம்பர் 16ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பு பின்வருமாறு:-

கோவையில் வரும் வாரம் முழுவதும் வானிலை மேகமூட்டத்துடன் சிறிய மழையுடன் காணப்படும். வெப்பநிலை 32°C வரை உயர்வதோடு, இரவு நேரங்களில் 22°C முதல் 23°C வரை குறையும்.

நவம்பர் 10 (திங்கள்):

பகுதி மேகமூட்டம்; ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.
வெப்பநிலை: 32°C / 23°C

நவம்பர் 11 (செவ்வாய்):


பகுதி மேகமூட்டம்; லேசான மழை வாய்ப்பு நீடிக்கும்.
வெப்பநிலை: 32°C / 23°C

நவம்பர் 12 (புதன்):


அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.
வெப்பநிலை: 32°C / 22°C

நவம்பர் 13 (வியாழன்):


அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை: 32°C / 22°C

நவம்பர் 14 (வெள்ளி):


வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு.
வெப்பநிலை: 32°C / 22°C

நவம்பர் 15 (சனி):


பகுதி மேகமூட்டம்; மழைக்கு வாய்ப்பு குறைவு
வெப்பநிலை: 32°C / 22°C

நவம்பர் 16 (ஞாயிறு):


வானிலை சீராக இருக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை
வெப்பநிலை: 32°C / 22°C

மொத்தத்தில், இந்த வாரம் பெரும்பாலான நாட்களில் கோவையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை மையத்தின் கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. அப்படி மாற்றங்கள் ஏற்படுகையில் அந்த விவரம் நமது செய்தித்தளத்தில் வெளியிடப்படும். இணைந்திருங்கள் வாசகர்களே…

Recent News

Video

எதுக்கு டார்ச் அடிச்ச…? கோவையில் விவசாயியை எச்சரித்த காட்டு யானை…!

கோவை: கோவை தடாகம் பகுதியில் டார்ச் அடித்து பார்த்தவரை நோக்கி வேகமாக வந்த காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், தாளியூர்...
Join WhatsApp