Header Top Ad
Header Top Ad

வெப்பவாதம் (Heat Stroke) என்றால் என்ன? கோடையில் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

Heat Stroke: கோடையின் கடும் வெயில் காரணமாக பலருக்கு வெப்பவாதம் ஏற்படுகிறது; இதனால் இந்தியாவில் உயிரிழப்போர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எதனால் வெப்பவாதம் ஏற்படுகிறது? என்ன செய்ய வேண்டும்? முழு விவரத்தை இத்தொகுப்பில் காணலாம்.

தண்ணீர் அதிகம் பருகாமல், அதிக நேரம் வெயிலில் இருக்கும் ஒருவருக்கு வெப்பவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகமான உடல் சூட்டினாலும், நீரிழப்பினாலும் நம் உடல் தன் கட்டுப்பாட்டை இழந்து வெப்பவாதம் ஏற்படுகிறது.

இது சில நேரங்களின் உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். இந்த வெப்பவாதத்திற்கு தக்க சமயத்தில் முதலுதவியும், மருத்துவ சிகிச்சையும் அவசியமாகும்.

Advertisement

உயர் உடல் வெப்பநிலை

உடலின் வெப்பநிலை 104°F (40°C) அல்லது அதற்கு மேல் இருத்தல்.

வியர்வை இல்லாமை

வியர்ப்பதற்குக் கூட உடலில் தண்ணீர் இல்லாமல் போதல். இந்த நேரத்தில் பொதுவாக, உடல் மிகவும் சூடாகவும், ட்ரையாகவும் (உலர்ந்தும்) இருக்கலாம்.

சிவப்பான/உலர்ந்த தோல்

உடல் வெப்பம் அதிகரிப்பதால் தோல் சிவப்பாகும்.

இதயத் துடிப்பு & மூச்சு

நம் உடலை மிகவும் சூடாகின்ற சமயத்தில் அதனைக் குளிர்விக்க இதயம் மற்றும் நுரையீரல் அதிகமாக வேலை செய்யும்.

மயக்கம் மற்றும் குழப்பம்

சரியாகச் சிந்திக்க முடியாமை (Confusion), பேச்சில் தெளிவின்மை (slurred speech) மற்றும், தன்னிலை இழத்தல் (disorientation).

வாந்தி மற்றும் குமட்டல்

அதிகமான வெப்பத்தை நம் உடல் குறைக்க முயலும்; அப்போது வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படலாம்.

தலைவலி

வெப்பவாதத்தால் பதிக்கப்படுவோரில் பலருக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்படக்கூடும். இது மிக முக்கியமான அறிகுறியாகும்.

வலிப்பு

கடுமையான நிலையில், மயக்கம் அல்லது வலிப்பு ஏற்படக்கூடும்.

வெப்பத் தாகத்தைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (precautions)

இந்த கோடை காலத்தில் எப்பொழுதும் அதிக தண்ணீர் மற்றும் மினரல்கள் நிறைந்த திரவங்களை( electrolyte rich fluids) பருகுவது அவசியம்.

லேசான மற்றும் காட்டன் உடைகளை அணியுங்கள். மேலும் முடிந்த அளவு லைட் கலர்களை தேர்ந்தெடுங்கள்.

முடிந்தளவு காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை நிழலான இடங்களில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உடல் அதிக சூடாகும் போது, தண்ணீர் குடிக்க வேண்டும். முகம், கை, கால் கழுவ வேண்டும். உடலை அடிக்கடி தண்ணீர் கொண்டு துடைக்க வேண்டும்.

கடும் வெப்ப நேரத்தில் நாம் வெய்யிலில் வேலை செய்வதையும், உடற்பயிற்சி செய்வதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அப்படி இருந்தாக வேண்டிய சூழலில் அடிக்கடி இடைவெளி எடுத்துக் கொள்ளவும்.

கார் சில நிமிடங்களில் கடுமையான வெப்பமடையும், உள்ளே இருந்து வெளியே வர முடியாத நிலையில், உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

முதலில் அறிகுறிகளைக் கவனிக்கவும். மயக்கம், வியர்வை, அல்லது சோர்வு போன்றவை கவனிக்க நேர்ந்தால் உடனடியாக நாம் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவரை நிழலான மற்றும் குளிர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லவும்.

அவர் அணிந்திருக்கும் கூடுதல் உடைகளை அகற்றவும். ஈரத் துணி, ஐஸ் பேக் கொண்டு அவரது உடலைத் துடைக்கலாம்.

அவர் சுய நினைவுடன் இருக்கும் பட்சத்தில் குளிர்ந்த நீர் (cool water) அதிக குளிர் ( Cold water) அல்லாத தண்ணீரை குடிக்க வழங்குங்கள்.

முதலுதவி செய்யும் முன்னரே உடனடியாக அவசர மருத்துவ உதவியை அழைக்கவும்.

மருத்துவர் பரிசோதனை இன்றி எந்தவொரு மருந்து மாத்திரைகளையும் அவருக்குக் கொடுக்க வேண்டாம்.

வெப்பவாதத்தை முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (precautions) மூலமாக நாம் தவிர்க்க முடியும். வெயிலில் அலைந்து திரியும் ஒரு தொழிலாளியையோ, சக மனிதரையோ பார்த்தால் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தும் உதவலாம்.

Recent News

Latest Articles