தவெக, OPS, டிடிவி பேசி வருவது- உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்

கோவை: OPS, டிடிவி தினகரனுடன்
ஆகியோருடன் தவெக பேசிக்கொண்டு இருப்பது உண்மை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்துடன் , ஓபிஎஸ் அணியினர் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு , பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
அனைத்து மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள்,
அந்த கருத்தின் அடிப்படையில் இரண்டு நாட்களில் நல்ல முடிவு எடுப்பதாக கூறியிருக்கின்றார் என தெரிவித்தார்.

எந்த காலகட்டத்திலும் EPS தலைமையில் இருக்கின்ற அதிமுகவில் இணைக்க போவதில்லை, துரோகத்திற்கு இடமளிக்க போவதில்லை, விரைவில் நல்ல முடிவுகளை மேற்கொள்வார்கள் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியுடன் தவெக இணைய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு , அதுபோன்ற கருத்துக்கள் இல்லை
இணைய வேண்டிய இடத்தில் இணைவோம் என்றார். ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள், கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதை மக்களே கோஷமிட்டார்கள், என்னை பொறுத்த வரையில் பொங்கல் முடிந்த பிறகு ஒரு திருப்புமுனையை பார்க்கலாம், பொங்கல் பண்டிகைக்கு பிறகு நல்ல முடிவுகளை பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

அதிமுகவில் இருந்து சிலர் வருவார்களா என கேட்டால் , வருவார்கள் எனவும் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியை கொள்கை ரீதியாக எதிர்க்கின்றோம் என்ன சொல்லி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருடன் பேசப்படுவது தொடர்பான கேள்விக்கு,ஒவ்வொருவரும் பேசிக்கொண்டு இருப்பது உண்மை, அதே நேரத்தில் அவர்கள் எப்போது முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை.


தமிழக வெற்றி கழகத்தில் என்னைப் போன்றவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர், நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.

என்னுடைய பயணத்தை பொறுத்தவரை
புரட்சித் தலைவர், புரட்சித்தலைவியைப் போல மகிழ்ச்சியாக இருக்கிறது
விஜய்க்கு வரும் 27,28 மலேசியாவில் நிகழ்ச்சி உள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்தெந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் என்பது குறித்து சொல்வார்கள் எனவும் தெரிவித்தார்.

மக்களால் அவர் 2026 ல் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார். புரட்சித்தலைவர் இயக்கம் ஆரமித்த பொழுது மக்கள் அலை எப்படி வந்த்தோ, அதைபோலவே அலை இவருக்கும் வந்து கொண்டு இருக்கிறது, கூட்டத்தை கூட்டுவதற்கு செலவு செய்கின்றனர்,
செலவு செய்யாமல் கூட்டம் கூடும் தலைவராக மக்கள் தலைவராக விஜய் இருக்கிறார்,
இவர் எதிர்காலத் தமிழத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

கொங்கு மண்டலத்தில் திமுக தீவிரமாக பணியாற்றி வருவது குறித்த கேள்விக்கு,
கொங்கு மண்டலத்தை யார் பிடிக்கிறார்கள் என்பதை தேர்தல் களத்தில் பார்க்கலாம் எனவும், கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றி கழகம் வெற்றிவாகை சூடும் எனவும் தெரிவித்தார்.

Recent News

Video

Join WhatsApp