கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூபாய் 50 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த தொழிலாளி கைது செய்யப்பட்டார் !!!
கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூபாய் 50 லட்சம் நகை, பணம் திருட்டு, வீட்டில் உள்ள அலங்கார வேலை செய்யும் தொழிலாளியே போலீசார் கைது செய்தனர்.
கோவை, குனியமுத்துவைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் தங்கி உள்ளார். அவருடைய குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள், இந்நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வீட்டு அலங்கார வேலை செய்யும் சுரேஷ் என்பவர் செல்லதுரைக்கு அறிமுகமானார். அவர் செல்லதுரையின் விடுதியில் சில அலங்கார வேலைகளை செய்தார்.
அது பிடித்துப் போனதால் செல்லதுரை சுரேஷை கோவை, குனியமுத்தூரில் உள்ள அவர் வீட்டில் சில வேலைகளை செய்யுமாறு கூறி உள்ளார். அதன்படி அவர் அவ்வப்போது குனியமுத்துக்கு வந்து செல்லதுரை வீட்டில் அலங்கார வேலை செய்து கொடுத்தார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் பீரோவை திறந்து பார்த்தார். அதில் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் இருந்தது.
ஒரே நேரத்தில் திருடினால் தன் மீது சந்தேகம் வந்து விடும் என்பதால் கொஞ்சம், கொஞ்சமாக திருட திட்டமிட்டார். அதன்படி அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் கொஞ்சம், கொஞ்சமாக 40 பவுன் நகை, ரூபாய் 21 லட்சம் ஆகியவற்றை திருடி உள்ளார். அதன் மதிப்பு ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பீரோவில் இருந்த நகை, பணம் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லதுரை. குனியமுத்தூர் காவல் துறையில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் குனியமுத்தூர், உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் செல்லதுரை வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நகை பணத்தை கொள்ளை அடித்தது சுரேஷ் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 50 லட்சம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.