கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்- 2 பேர் கைது

கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுத்து, போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலும், நேரடி மேற்பார்வையிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.

Advertisement

இந்நிலையில் பேரூர் மற்றும் கோவில்பாளையம் காவல் நிலையங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையின் போது, பேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிரன்ஜிப் ஜெனா @ முன்னா (வயது 28)* என்பவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோன்று கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சித்தார்த் @ புலு சுனா (வயது 31) என்பவரிடம் இருந்து மேலும் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரும் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Recent News

வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் திமுக முறைகேடு செய்துள்ளது- அண்ணாமலை குற்றச்சாட்டு…

கோவை: திமுக பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளும் முறைகேடுகளும் செய்துள்ளது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், திமுக...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp