பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லையில் 236 சிசிடிவி கேமராக்கள்…

கோவை: பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 236 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டன.

Advertisement

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் தனியார் பங்களிப்பில் கட்டுப்பாடு அறையுடன் கூடிய 236 கண்காணிப்பு கேமராக்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளுடன் கவால்துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்திற்கு உடப்ட்ட பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் நரசிம்மநாயக்கன்பாளையம், இடிகரை, கேஸ் கம்பெனி, பெரியநாயக்கன்பாளையம் டவுன், திருமலைநாயக்கன்பாளையம், கோவனூர், பாலமலை, நொச்சிபாளையம், காளிப்பாளையம், தொட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 236 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, அனைத்தும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும் என்றார்.

இக்கண்காணிப்பு கேமிராக்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் திறந்து வைத்து சிசிடிவி காமிரா பொருத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். வரவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளுடன் கவால்துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

மண் திருட்டை கண்காணிக்கும் பொருட்டு 20 கேமராக்கள் அரசாங்கத்தால் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் காவல்துறை பொதுமக்களிடம் CCTV கேமராக்கள் பொருத்துவதால் சந்தேக நபர்களை கண்காணிக்கவும் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சுமார் 1,500 கேமராக்களை பொதுமக்கள் தங்களது வீடுகளில் பொருத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...