Header Top Ad
Header Top Ad

சமையலுக்கும், சேமிப்புக்கும் 12 டிப்ஸ்…! பகுதி-2

சமையல் என்பது ஒரு கலை. அதனால் நமக்கு ருசியான உணவு கொடுப்பவர்களை சமையற்கலைஞர்கள் என்று கூறுகிறோம்.

சிறந்த உணவைத் தயாரிக்கவும், சமையல் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும், சமயற்கலைஞர்களை சில உத்திகளைக் கையாள்கின்றனர்.

Advertisement

கோவையைச் சேர்ந்த சமையற்கலைஞர் ராகவன் நமக்குக் கொடுத்த சில டிப்ஸ்களை இந்த தொகுப்பில் காணலாம்.

பசுமையான கீரைகளுக்கு…

கீரைகள் பசுமையாக இருக்க, மீதமுள்ள அவற்றை அப்படியே ப்ரிஜில் வைக்காமல், ஒரு காகிதத்தில் மடித்து அதனை, பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து, பின்னர் ப்ரிட்ஜில் வைத்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கும் பசுமையாக இருக்கும்.

கீரைகள் ருசிக்க…

முருங்கைக்கீரையை வதக்கும் போது அதில் உப்பு, மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். கீரை நிறம் மாறுவதற்குள் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அகத்திக்கீரை பொரியல் செய்யும்போது, பச்சை நிறம் மாறும் வரை வதக்கி வேண்டும். இறுதியாக தேங்காய்த் துருவல் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து இறக்கலாம். வயிறு கோளாறு ஏற்படாது. மிகவும் சத்தான மற்றும் சுவையான உணவாக இருக்கும்.

டேஸ்ட்டான சட்னிக்கு…

சட்னி அரைப்பதற்கான கலவையுடன் வறுத்த வேர்க்கடலை, 2 பல் பூண்டு மற்றும் கொஞ்சம் இஞ்சி சேர்த்தால் சட்னியின் டேஸ்ட் பல மடங்கு அதிகரிக்கும். தக்காளி, தேங்காய் சட்னிகளுக்கு இது உகந்த முறை.

பிரமாதமான புளியோதரைக்கு…

தனியா (ஒரு தேக்கரண்டி), தேவையான அளவு மிளகு, வேர்க்கடலை (தோல் நீக்கியது), ஆகியவற்றை வறுத்து எடுங்கள். பிறகு கொரகொரவென்ற பதத்தில் அரைத்து எடுத்து, அதனை புளியோதரையில் சேர்த்தால் அதன் சுவை இன்னும் அதிகரிக்கும்.

தக்காளி பழுக்க…

காய்களாக வாங்கிய தக்காளிப் பழங்களை ப்ரிட்ஜில் வைக்காமல், ஓரிரு நாட்கள் வெளியில் வைத்துவிடுங்கள். தானாக நன்கு பழுத்துவிடும்.

மொறுமொறு சிப்ஸ்…

உருளைக்கிழங்கு சிப்ஸ் மொறு மொறுவென வரவேண்டும் என்றால், முதலில் கிழங்கைச் சீவி, உப்பு கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர், துணி அல்லது பேப்பரில் பரப்பி காற்றில் காயவையுங்கள். பிறகு பொரித்து எடுங்கள், மொறுமொறு சிப்ஸ் ரெடி.

அடுத்த 6 டிப்ஸ்களைப் படிக்க 👇

இந்த குட்டி குட்டி டிப்ஸ்களை உங்கள் வீடுகளில் முயன்று பாருங்கள்… உங்களிடம் இதுபோன்ற டிப்ஸ் இருந்தால் எங்களிடம் கூறுங்கள்…

Recent News

Latest Articles