கோவை: உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மதுக்கரை வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
கோவை மாவட்டம், மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை நேற்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்து, பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டார்.
மேலும், அப்பகுதி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று காலை சுந்தராபுரம் உழவர் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், வியாபாரிகளிடம் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குச் சென்ற அவர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். பின்னர் மாணவர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.