தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

கோவை: தடாகம் அருகே வாழைமரங்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள் கூட்டத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், பன்னிமடை, தாளியூர், வரப்பாளையம், நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டுயானைகளும் காட்டுப்பன்றிகளும் விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.

அண்மை காலமாக இரவு நேரங்களில் ஊருக்குள் சுற்றி திரியும் காட்டுப்பன்றிகள் வாழை மரம், விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கிறது. இது குறித்து அப்பகுதி விவசாயிகளும் வனத்துறையினரிடம் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வரப்பாளையம் ஊருக்குள் இரவு நேரம் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழை மரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்தி சென்றுள்ளன. தற்போது அந்த காட்டுப்பன்றிகள் சுற்றி திரிந்து வாழை மரங்களை சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Advertisement

காட்டுப்பன்றிகளால் நாள்தோறும் பெரும் சிரமங்களை சந்தித்து வரும் விவசாயிகள் வனத்துறையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...