கோவை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் TNPSC மூலம் கடந்த ஜூலை 15ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2ல் 50 காலி பணியிடங்களும், டிஎன்பிஸ்சி குரூப் 2-ஏ வில் 595 காலிப்பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த தேர்வுகளுக்கான முதல் நிலை தேர்வு 28-9-2025 அன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்வின் தொடர்ச்சியாக நடைபெற உள்ள முதன்மை போட்டி தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள் வருகிற 5ம் தேதி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்பட உள்ளது.
பயிற்சி வகுப்புகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடைபெற உள்ளது. இந்த மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச Wifi வசதி, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியன உள்ளது.
மேலும் வாரத்தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளது. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாட குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




இந்த வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் மனு தாரர்கள் மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.



