எஸ்.பி.வேலுமணியை புகழ்பாடிய நடிகை விந்தியா…

கோவை: கோவையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணியை நடிகை விந்தியா புகழ்ந்தார்.

கோவை, பேரூர், செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரபல நடிகையுமான விந்தியா, என் இதய தெய்வம், என்னை உருவாக்கிய சிற்பி, முகவரி தந்த முதல்வர் அம்மா எனப் புரட்சித் தலைவி ஜெயலலிதாவிற்குத் தனது முதல் வணக்கத்தைச் செலுத்தி உரையைத் தொடங்கினார். இயக்கத்தை வழி நடத்தும் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி பழனிசாமி ‘மன்னன்’ எனப் புகழ்ந்தார். .

​முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை ‘தோல்வி அறியாத வெற்றிச் சாமி’ என்றும் ‘கொங்கு மக்களின் அன்பு அதிபதி’ என்றும் வர்ணித்த விந்தியா, அவரது குடும்பத்தினரோடு தனக்கு இருக்கும் ஆழமான பிணைப்பை மேடையில் பகிர்ந்து கொண்டார்.

எஸ்.பி வேலுமணி வெற்றிக்குப் பின்னால் இருக்கும் எங்கள் நல்ல அண்ணி கையால் நான் பல நாட்கள் சாப்பிட்டு இருக்கிறேன்; அந்த நன்றியோடு தான் அண்ணி என்று கூப்பிடுகிறேன் என கூறினார். ​மேடையில் இருந்த மகேஸ்வரி, மணிமேகலை மற்றும் தனக்குப் புது புத்துணர்ச்சி அளித்த அன்பு சகோதரி கௌதமி ஆகியோரைப் பாராட்டிய விந்தியா, கீழே அமர்ந்து இருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் விஸ்வாசம் காட்டும் கோவை மக்களுக்கும் தனது மரியாதையைத் தெரிவித்தார்.

Advertisement

இந்தக் கொங்கு நாட்டுச் சிங்கக்குட்டிகளுக்கும், தங்கக் கட்டிகளுக்கும் இந்த மண்ணிற்கும் தலைவணங்குகிறேன் என அவர் கூறினார். அப்போது தொண்டர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.

கோவை விவசாய கோவை, விஸ்வாச கோவைப்என அடுக்குமொழியில் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.