கோவையில் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கல்- வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அதிமுக சார்பில் பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துகொள்ள

கோவை மதுக்கரை நகரக்கழக செயலாளர் சண்முகராஜா தலைமையில்

கல்லூரி மாணவிகள், பணிக்கு செல்லும் பெண்கள், பேருந்தில் பயணிக்கும் பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே வழங்கப்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம் ஆண் நன்பருடன் பேசிக்கொண்டு இருந்த கல்லூரி மாணவியை மர்ம நபர்கள் மூன்றுபேர், ஆண் நன்பரை அரிவாளால் வெட்டி மாணவியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்து தப்பி ஓடிய சம்பவம் தமிகழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதால், பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக.,வினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Amazon இல் பெற்றிட..

இதனிடையே அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகம், கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கரை நகரக்கழக செயலாளர் சண்முகராஜா தலைமையில் அதிமுகவினர் சுந்திராபுரம் பேருந்து நிறுத்தத்தில் நின்ற பெண்களுக்கும் பேருந்து பயனம் மேற்கொள்ளும் பெண்களுக்கும் பெபர் ஸ்ப்ரே வழப்க்கினார்.

அதை தொடர்ந்து கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கும் பெப்பர் ஸ்ப்ரே வழங்கி விழுப்புணர்வை ஏற்படுத்தினார்.

Recent News

Video

Join WhatsApp