கோவையில் 90 பறக்கும் படைக்குழு அமைப்பு…

கோவை: கோவை மாவட்டத்தில் 90 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 13,08,898 பேரும் பெண் வாக்காளர்கள் 14,05,246 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 532 பேரும் எனமொத்தம் 27,14,676 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தலின் போது வாக்காளர்களுக்கு இலவசமாக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதை தடுத்திடும் பொருட்டு செலவினக் கண்காணிப்பு குழுக்கள் அமைந்துள்ளன. அதன்படி 90 பறக்கும் படை குழுக்கள், 90 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 10 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகுதிக்கு 9 குழுக்கள் வீதம் கோவை 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 90 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 8 மணி நேரத்திற்கு 3 குழுக்கள் எனசுழற்சி முறையில் 24 மணி நேரமும் இக்குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும்.

Advertisement

பொதுமக்கள் ரூ.50,000/- வரை எடுத்துச் செல்ல ஆவணங்கள் ஏதும் சமர்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. உரிய ஆவணங்களின்றி ரூ.50,000 க்கு மேல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருளாக கொடுப்பதற்காக எடுத்துச்செல்லப்படும் பரிசுப்பொருட்கள் ஆகியவை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு ஆகியவற்றால் கைப்பற்று கைசெய்யப்படும்.


மேலும் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களால் செய்யப்படும் செலவினங்களை கண்காணிக்கும் பொருட்டு ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு வீடியோ கண்காணிப்புக் குழு என 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

கைப்பற்றுகை செய்யப்படும் பணம் மற்றும் இதர பொருட்களை விடுவிக்கும் விசாரணை செய்து விடுவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளதுபொதுமக்கள் தங்கள் வசம் உள்ள ஆவணங்களை இக்குழுவின் முன்பு சமர்பித்து விசாரணைக்குப் பின்பு விடுவித்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...